கண்டி போகம்பர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் நான்கு பெண் சந்தேக நபர்களும் அடங்குவதுடன், அவர்களிடமிருந்து 39 கிராம் 265 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவர்கள் இன்று (05) கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

