கண்டி- பன்விலை நகரில் பயணிகள் பாவனைக்காக கட்டப்பட்டுள்ள பஸ் தரிப்பிடம், அசுத்தமாகக் காணப்படுவதால் அதைப் பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
பஸ் வண்டிகள் தரித்துச் செல்லும் பன்விலை நகரில் அமைக்கப்பட்டுள்ள பயணிகள் பஸ் தரிப்பிடம் யாசகர்கள் தங்குமிடமாகக் காணப்படுகிறது.
யாசகர்களின் பொருள்கள், பஸ் தரிப்பிடத்தில் ஆங்காங்கே கிடப்பதால் பயணிகள் இங்கு நிற்பதில் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகுவதாகத் தெரிவிக்கின்றனர்.
வெயில் மற்றும் மழைக்கு இவ்விடத்தில் பயணிகள் ஒதுங்கி நிற்க முடியாத நிலை காணப்படுவதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை சீர் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.