கணவானல் கூறிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட மனைவி உயிரிழந்துள்ளதக தகவல் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் அம்பாந்தோட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம்
அம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தெஹெம்பர பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை (டிச. 24) கணவன், மனைவிக்கிடையில் ஏற்பட்ட குடும்ப தகராறினால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
தெஹெம்பர பஹல பெரகம பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே கொல்லப்பட்டுள்ளார்.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான 55 வயதுடைய குறித்த பெண்ணின் கணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.