காலி (Galle) – ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீட்டிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் 50 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீட்டின் படுக்கையறையிலேயே சில நாட்களுக்கு முன்னர் இறந்துள்ள நிலையில் தற்போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வேலைக்காக கணவர் வெளிநாடு சென்றுள்ள நிலையில், மனைவியான குறித்த பெண் தனியாகவே வீட்டில் வசித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.