தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விபச்சார விடுதியொன்றை சுற்றிவளைத்த பொலிசார், தகாத தொழிலில் ஈடுபட்ட 5 அழகிகளையும், விடுதியை நடத்திய ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தரையும் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்கள் நேற்றுமுன்தினம் கைது செய்ததாக அனுராதபுரம் பிரதேச குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள் அனுராதபுரம், சிரவஸ்திபுர, ராஜாங்கனை, கல்கமுவ மற்றும் நொச்சியாகம பிரதேசங்களைச் சேர்ந்த 25- 45 வயதிற்குட்பட்ட பெண்களாவார்.
அத்துடன் விடுதியை நடத்திய 52 வயதுடைய நபரும் கைது செய்யப்பட்டார். பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தம்புத்தேகம – தலாவ பிரதான வீதியில் ஆரியகம பிரதேசத்தில் சுமார் பத்து வருடங்களாக இயங்கி தங்குமிடத்தை சோதனையிட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் பொலிஸாரின் பிடியில் சிக்கக்கூடாது என்பதற்காக இரண்டு பெண்கள் சட்டப்பூர்வமான இரண்டு கணவர்களுடன் தகாத தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கணவர்களும், அழகிகளுடன் தங்கியிருந்த ஆண்களும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
விடுதி பதிவேட்டின்படி, இரண்டு பெண்கள் தங்கள் சட்டபூர்வ கணவர்களுடன் விடுதியில் தங்கியிருந்தனர். விடுதிக்கு உல்லாசம் அனுபவிக்க வரும் ஆண்களிடம், 5 பெண்களையும் காண்பிக்கும் முகாமையாளர், 25 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட பெண்களை 6000 ரூபாவிற்கும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களை 4000 ரூபாவிற்கும் விற்பனை செய்வார் என விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விடுதியின் பிரதான சந்தேக நபரான ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் சில காலமாக இந்த மோசடியில் இருந்து நாளொன்றுக்கு 50,000 ரூபாவுக்கு மேல் சம்பாதித்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து பெண்களும், பிரதான சந்தேக நபரும் நேற்று தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது