தனது கணவரின் சகோதரியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது நிர்வாண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக கண்டி கணினி குற்றத்தடுப்பு பிரிவிற்கு செய்த முறைப்பாட்டின் பிரகாரம், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய இந்த பெண் தனது நண்பர்கள் மத்தியில் வட்ஸ்அப் சமூக ஊடக வலையமைப்பின் ஊடாக நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்தே சந்தேக நபரான பெண் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.