கட்டுப்பாட்டு விலைக்கு அதிகமாக முட்டைகளை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் முட்டை இருப்புகளை மறைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களைக் கண்டறியும் நோக்கில் மேலதிக சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் தெரிவித்துள்ளது.
அந்த அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல கடந்த ஜனவரி மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் இதுவரை காலப்பகுதியில் வடமேல் மாகாணம், கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் அதிகளவான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற 83 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.