கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் மேற்கொள்ளவுள்ளதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக பரப்பப்படும் மின்னஞ்சல்களில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு செயலாளர், மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) தெரிவித்துள்ளார்.
எனவே மக்கள் இது தொடர்பில் பதற்றமடைய வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.