நாட்டின் மற்றுமொரு எண்ணெய் கிணற்றை இந்தியாவிடம் அரசாங்கம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிணற்றை தான் இவ்வாறு அழைக்கவுள்ளதாக பெற்ரோலிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் 99 எண்ணெய் கிணறுகள் உள்ள நிலையில் அவற்றுள் ஒன்று மட்டும் தான் இலங்கை அரசங்கத்தின் வசம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினத்தில் இந்திய வெளிவிவகார செயலர் திருகோணமலையில் விஜயம் புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.