இலங்கையில் ஒன்லைனில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை தொடர்பில் புதிய அறிவிப்பு ஒன்றை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஜூலை 20 ஆம் திகதி வரை ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டிற்கு ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், நாளாந்தம் விண்ணப்பிக்கப்படும் வரையறை மீறப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை 21 ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவையின் கீழ் விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் நாளாந்தம் 2500 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகின்றன.
மேலும், இந்த மாதத்தில் முதல் 10 நாட்களில் 31,725 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.