கடலில் மிதந்து வந்த நிலையில் மீனவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இச் சம்பவம் யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை பகுதியில் இடம் பெற்றுள்ளது.
சம்பவம்
குறித்த மீனவர் நேற்று (ஜன 02) கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் தண்ணீரில் மூழ்கி இன்று (ஜன 03) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உறவினர்கள் சடலத்தினை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முற்பட்டவேளை கடற்படையினருக்கும் உறவினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
அதனையடுத்து அவர்கள் சடலத்தினை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளனர்.
சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியைச் சேர்ந்த கணபதி தவம் (வயது 58) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்