முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கில் ஊடாக கஞ்சாவினை கடத்த முற்பட்ட நால்வர் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவ் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்று (29) மாலை சுதந்திரபுரம் கரிசல்வெளி கடற்கரையில் உலங்கு வானூர்தி கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச வாசிகள் தெரிவித்துள்ளார்கள்.
கஞ்சா கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து சுதந்திரபுரம் பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கஞ்சாவினை கடத்தி உந்துருளியில் கடத்தி சென்று வேளை மூன்று உந்துருளியினையும் நால்வரையும் கைது செய்துள்ளார்கள்.
இவர்களிடம் இருந்து 89 கிலோ பொதி செய்யப்பட்ட கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது. மூங்கிலாறு பிரதேசத்தினை சேர்ந்த மூவர் மற்றும் விசவமடு பிரதேசத்தினை சேர்ந்த ஒருவர் என 44, 24, 24, 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய உந்துருளி மூன்றும் மீட்கப்பட்டுள்ளன கைப்பெற்றப்பட்ட கஞ்சா மற்றும் சான்று பொருட்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளதுடன் இவற்றை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.