கடந்த நவம்பர் மாதம் வௌிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.