வீட்டுத் தோட்டம் என்ற போர்வையில் கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்டுவந்த 29 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை, குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெட்டகேதெனிய பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறுந்துவத்த பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே இச்சுற்றிவளைப்பு கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
மரக்கறி மற்றும் தேயிலை செடிகளுக்கு மத்தியிலேயே கஞ்சா வளர்க்கப்பட்டுள்ளது. சுமார் 4 அடி நீளமான இரு கஞ்சா செடிகளே கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதானவரை நீதிமன்றதில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறுந்துவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.