நுரைச்சோலை அனல் மின் நிலையம் மீள இயங்கும் வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே ஓட்டோ டீசல் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. நாளாந்தம் 4,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,500 மெட்ரிக் தொன் ஒக்டேன் 92 ரக பெட்ரோலை சந்தைக்கு விநியோகிப்பதாக அமைச்சு கூறியுள்ளது.
மேலும் ஒக்டேன் 92 ரக பெட்ரோலே பெரும்பாலான சந்தைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்