காங்கோ நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள தெற்கு கிவுவை சேர்ந்தவர் லுவிசோ என்ற வாலிபர் ஒரே நேரத்தில் மூன்று சகோதரிகளை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.
காங்கோ- ருவாண்டாவின் எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு கிவுவில் அமைந்துள்ள கலேஹேவில் திருமணம் நடைபெற்றது.
லுவிசோ நடாஷா, நடாலி மற்றும் நடேஜ் ஆகிய சகோதரிகளை திருமணம் செய்து கொண்டார். அதேசமயம் காங்கோ நாட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அனுமதி உள்ளது.
ஆனால் மூன்று சகோதரிகளை திருமணம் செய்துகொள்ளும் அவரது முடிவை அவரது பெற்றோர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது பெற்றோர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.
திருமணம் தொடர்பில் மணமகன் லூசோ கூறுகையில்,
நான் கனவு கண்டது போல் தெரிகிறது!நான் முதலில் நடாலியை காதலித்தேன். அதன் பிறகுதான் அவரது 2 சகோதரிகளை சந்தித்தேன். அவர்கள் சகோதரிகள் என்பதால் அனைவரையும் திருமணம் செய்ய நான் சம்மதித்தேன்.
இது எளிதான முடிவு அல்ல, மற்றவர்கள் என்ன நினைத்தாலும் எனக்கு கவலை இல்லை. மூன்று சகோதரிகளை திருமணம் செய்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெற்றோர் என் முடிவை வெறுத்தார்கள் அதனால் தான் அவர்கள் என் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் காதலுக்கு எல்லை இல்லை என்றுதான் என்னால் சொல்ல முடியும்,என அவர் கூறினார்.