ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
தாய் தந்தை, பாட்டி தாத்தா மற்றும் மகள் மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
அங்கு இதுவரை சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாத 19 குடும்பங்களின் திருமண பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்படி திருமணம் செய்து கொள்ளாததால் அந்த குடும்பங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்குவதில் உள்ள சிக்கல்களை குறைக்கவும், பணியாளர் நல நிதி பெறுவதில் உள்ள சிக்கல்களை குறைக்கவும் இந்த திருமணம் நடத்தப்பட்டது.
இதன்போது நடைபெற்ற திருமணங்களுக்கான சாட்சிகளுக்காக கண்டி மாவட்ட செயலாளரும் யட்டிநுவர பிரதேச செயலாளரும் கையொப்பமிட்டுள்ளனர்.