எம்பிலிபிட்டிய (Embellipitia) நோனகம வீதியில் நேற்று (31.03.2004) இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் தந்தை மற்றும் இரு பிள்ளைகள் காயமடைந்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள வீட்டிற்குச்சென்று கொண்டிருந்த போது காரின் முன் இருக்கையில் இருந்த மனைவி தூங்கியதால், கார் வீதியின் எதிர்புறமாக சென்று வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில வீதியில் வசிக்கும் மாத்தறையில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் பணிபுரியும் சமந்திகா ஜயசிங்க என்ற 51 வயதுடைய ஆசிரியை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அம்பலாந்தோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரான உயிரிழந்த ஆசிரியையின் கணவர், அம்பலாந்தோட்டை அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த 20 மற்றும் 16 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.