டெல்டா வகை கொரோனாவைவிட ஒமிக்ரோன் வகை 70 மடங்கு அதிக வேகத்தில் பரவும் என்று ஹாங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், டெல்டாவைவிட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமிக்ரோன் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது: டெல்டா மற்றும் ஒமிக்ரோன் வகை கொரோனாக்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், டெல்டாவைவிட 70 மடங்கு வேகத்தில் ஒமிக்ரோன் மற்றவா்களுக்குத் தொற்றி, பல்கிப் பெருகுவது தெரிய வந்தது.
இருந்தாலும், அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் டெல்டாவைவிட மிகக் குறைவாகவே நுரையீரலைத் தாக்குவதும் ஆய்வில் தெரியவந்தது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
இந்தோனேசியாவில் முதல்முறை : இதற்கிடையே இந்தோனேசியாவில் முதல்முறையாக ஒமிக்ரோன் வகைத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளா் ஒருவருக்கு அந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது சோதனையில் உறதிசெய்யப்பட்டுள்ளது.
தொற்றுநோய் புள்ளிவிவரங்களை அளிப்பதற்கான ஜிஐஎஸ்ஏஐடி-யின் புள்ளவிவரத்தின் அடிப்படிப்படையில், வியாழக்கிழமை நிலவரப்படி உலகம் முழுவதும் 6,951 பேருக்கு ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.