ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக தலையீடு செலுத்துமாறு ´லக்மவ தியநியோ´ அமைப்பு தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
இன்று (14) காலை குறித்த கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்கால தலைமுறையை ஒன்லைன் விளையாட்டுக்களில் இருந்து மீட்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் பண்டாரகம, ரைகம பகுதியில் ஒன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருந்த 16 வயது சிறுவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டிருதமை குறிப்பிடத்தக்கது.