ஐஸ் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்து காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவமானது நேற்று (20) இரவு காத்தான்குடி மத்திய மகா வித்தியாலத்தின் பின்னால் உள்ள கர்பலா வீதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 64.286 மில்லி கிராம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
காத்தான்குடி – 6 ஆம் பிரிவினை சேர்ந்த சந்தேக நபரான 50 வயது மதிக்கத்தக்க நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் போதைப்பொருள் கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சான்று பொருட்கள் யாவும் காத்தான்குடி பொலிஸரிடம் சட்ட நடவடிக்கைக்காக விசேட அதிரடிப்படையினரால் பாராப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த காத்தான்குடி பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து செல்வதை தடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினரின் ரோந்து சேவை படைபிரிவு பல்வேறு தகவல்களை திரட்டி சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருகின்றது.