இலங்கைக்கு வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய குழுவுக்கும் கூட்டமைப்பிற்கும் இடையே சந்திப்பு ஒன்று கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச்சந்திப்பு இன்று (28) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோவிந்தன் கருணாகரம், எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை மீள வழங்குவதெனில் இலங்கை முழுமையான நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றித்தின் பரதிநிதிகளிடம் வலியுறுத்தியதுள்ளனர்.
இதேவேளை, ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையை இலங்கைக்கு வழங்கக்கூடாதென ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை கவனத்தில் எடுக்கும்படி கூட்டமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டது.