2023 ஆம் ஆண்டுக்கான இந்திய பிரிமியர் லீக் போட்டியில் காயம் காரணமாக கேன் வில்லியம்சன் வெளியேறிய நிலையில், இலங்கை அணித் தலைவர் தசுன் சானக்கவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீர்மானித்துள்ளது.
ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வில்லியம்சனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டு துடுப்பெடுத்தாட முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகி தனது நாட்டுக்கு புறப்பட்டார்.
இந்நிலையில், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத தசுன் சானக்க தனது அடிப்படை விலையான 50 இலட்ச இந்திய ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.