வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில். இது கடந்த ஆண்டை விட இது 100% முன்னேற்றம் என சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.
அதேசமயம் இந்த ஆண்டு 300,000 பேரை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப பணியகம் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக பல நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை 2022 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 288,645 கடவுசீட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரியில் மொத்தம் 52,278 கடவுசீட்டுகளும், பிப்ரவரியில் 55,381 கடவுசீட்டுகளும் , மார்ச்சில் 74,890 கடவுசீட்டுகளும் , ஏப்ரலில் 53,151 கடவுசீட்டுகளும் , மே மாதத்தில் 52,945 கடவுசீட்டுகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் ஏற்பட்டுள்ல நெருக்கடி நிலையை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.