மேலும் 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தைக்கு அறிவித்துள்ளது.
இதனை அந் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
அதன்படி நாடளாவிய ரீதியில் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு எரிசக்தி அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.