ஏழாலையில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 02 ஆம் திகதியில் இருந்து பாடசாலைக்கு வந்து வரவை உறுதிப்படத்துமாறு கல்வி அமைச்சினால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த சுற்றுநிருபத்துக்கு ஏற்ப பாடசாலைக்குச் சென்ற ஆசிரியர் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே வேளை குறித்த பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியருடன் நெருங்கிப்பழகிய இன்னுமொரு ஆசிரியர் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரால் கற்பிக்கப்பட்ட தரம் 11 வகுப்பு மாணவர்கள் 30 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.