கருவா, மிளகு, சாதிக்காய், கராம்பு மற்றும் கோப்பி உள்ளிட்ட பல ஏற்றுமதி பயிர்களின் சந்தை விலை உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு செப்டெம்பர் 30 ஆம் திகதி வரை மசாலாப் பொருட்கள் ஏற்றுமதியின் ஊடாக இலங்கை 350 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியுள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோ கிராம் மிளகின் விலை 500 ரூபாயில் இருந்து 900 ரூபாயாகவும், கருவாவின் விலை 3,400 ரூபாயாகவும், ஒரு கிலோ கராம்பின் விலை 1,400 ரூபாயாகவும், ஒரு கிலோ சாதிக்காயின் விலை 1,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மாத்திரம் இதுவரையிலும், கருவா, மிளகு மற்றும் கராம்பு உள்ளிட்ட 45,000 மெட்ரிக் டொன்களுக்கும் அதிகமான முக்கிய ஏற்றுமதி பயிர்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.