2024ல் ஏற்படவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி 54 வருடங்களுக்கு முன் பிரபல பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த வருடத்திற்கான முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழவுள்ளதுடன் இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகின்றது.
சூரிய கிரகணத்தின் போது, பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருள் சூழப்படவுள்ளதுடன் நிலவு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் பார்வையில் காட்சியளிக்கவுள்ளன.
இதேவேளை, அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரிக்கையில் இந்த அபூர்வ சூரிய கிரகணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டிலேயே ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமை சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பார்வையிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.