இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இறுதி ஒருநாள் போட்டியில் வெற்றிப் பெற்றுதன் மூலம் பங்காளதேஷ் அணி இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது.
இந்த போட்டி நேற்றையதினம் சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையில் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தது.
இதன்படி, துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் அணைத்து விக்கெடுகளை இழந்து 235 ஓட்டங்களை எடுத்தது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அட்டமிழக்காமல் ஜனித் லியனகே 101 ஓட்டங்களை பெற்றார்.
இதனையடுத்து 236 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்து 236 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் தன்சித் ஹசன் 84 ஓட்டங்களையும், ரிஷாத் ஹொசைன் 48 ஓட்டங்களை பெற்றனர்.
இந்த நிலையில், பங்களாதேஷ் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான ஏஞ்சலோ மேத்திஸின் டைம் அவுட் ஆட்டமிழப்பை கேளி செய்யும் விதத்தில் பங்களாதேஷ் வீரர் முஷ்பிகுர் ரஹீம் நடித்து காட்டியிருந்தார்.