எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தகவல் தொடர்ப்பு வலையமைப்பின் சேவையை சீனா முறியடித்துள்ளது.
செயற்கைக்கோள் மற்றும் லேசர் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி 6ஜி தொழிற்நுட்பத்தில் சீனா அமைத்துள்ளது. செயற்கைக்கோளிலிருந்து சேலர் மூலம் தரையில் உள்ள வலையமைப்புடன் தரவுகளை 100 ஜிகாபிட் அதிவேகத்தில் அடைந்ததை நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இது நிறுவனத்தின் முன்னைய சாதனையை 10 மடங்கு வேகத்தில் முறியடித்தது. சோதனையின் போது, செயற்கைக்கோளில் இருந்து டிரக்கில் உள்ள ஆப்டிகல் டெலஸ்கோப்புக்கு ரிமோட் சென்சிங் படங்கள் அனுப்பப்பட்டன.
இந்த சோதனையில் தரவு விகிதம் வினாடிக்கு 10 ஜிகாபைட்களை எட்டியது. இது பாரம்பரியமாக செயற்கைக்கோள் தொடர்புக்கு பயன்படுத்தப்படும் ரேடியோ-அதிர்வெண் இணைப்புகளை விட 10 மடங்கு அதிகமாகும் நிறுவனத்தின் லேசர் தகவல்தொடர்பு தொழில்நுட்ப இயக்குனர் வாங் சிங்சிங் கூறினார்.
ஸ்டார்லிங் செயற்கைகோள் தகவல்தொடர்புகளை இதுரை தரையில் உள்ள இணைய கேபிள்களுடன் நேரடியாக தகவல்களை அனுப்பவில்லை. செய்கோள் தட்டுகள் மூலம் தரையிலிருந்து தகவல் தொடர்புகளைப் பயன்படுத்துவதே இதுவரை பயன்பாட்டில் உள்ளது.
2027 ஆம் ஆண்டுக்குள் 300 செயற்கைக்கோள்களை நெட்வொர்க்கிங் செய்யும் இலக்குடன், ஜிலின்-1 விண்மீன் தொகுப்பில் உள்ள அனைத்து செயற்கைக்கோள்களிலும் இந்த லேசர் தகவல் தொடர்பு அலகுகளை அவற்றின் செயல்திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இது 6G இணையம் சேவையை செயற்கைக்கோள் ஊடாக பயன்படுத்த உட்கட்டமைப்புகளை சீனா அடித்தளத்தை அமைக்கிறது. 2022 இல், மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 100Gbps லேசர் பரிமாற்றத்தை உருவாக்கியது.
அடுத்த ஆண்டு, எம்ஐடியால் உருவாக்கப்பட்ட நாசாவின் டெராபைட் இன்ஃப்ராரெட் டெலிவரி (TBIRD) அமைப்பு 200Gbps சாதனையை எட்டியது. ஆனால், சாங் குவாங் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அமைப்பு கணிசமான நன்மையைக் கொண்டுள்ளது.
சீனாவின் அமைப்பு சுமார் 20 கிலோ எடை கொண்டது. ஆனால் தரை அலகு ஒரு டிரக்கில் பொருத்தப்படலாம் மற்றும் மொபைல் ஆகும். அதாவது இது விரைவான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கும். எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இப்போது சீனா முன்னேற்றம் அடைந்துள்ளதால் பின்னடைவில் உள்ளது.