இலங்கையில் மீண்டுமொருமுறை எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என நிறுவனங்கள் வெளிப்படையாக தகவலை அறிவித்துள்ளன.
இந்நிலையில் நாட்டில் அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்படவேண்டுமென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) விடாப்பிடியாக நிற்கிறார்.
இதேவேளை சமீபத்தில் சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா விலை பெருமளவில் அதிகரித்த நிலையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் மீண்டும் உயர்ந்துள்ளது.
நாட்டில் தற்போது பணிஸ் விலை 50 ரூபாவாகவும், மரக்கறி சாப்பாடு ஒன்றின் விலை 160 ரூபாவாகவும், மீன் சாப்பாடு விலை 180 ரூபாவாகவும், கோழி இறைச்சி சாப்பாடு விலை 240 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது. தேநீர் விலை 30 ரூபாவாகவும், பால் தேநீர் விலை 70 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன.