இந்த மாதத்தின் முதல் காலாண்டுக்கான எரிபொருள் விலை திருத்தம் இன்று மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தது.
மாற்றப்படும் திகதி
இந் நிலையில் எரிபொருள் விலைச்சூத்திரத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலை திருத்தம் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆகிய திகதிகளில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சூத்திரத்தின்படி முந்தைய எரிபொருள் விலை திருத்தம் ஜூலை 17 அன்று நடை பெற்றதோடு அது இன்று வரை மாறாமல் காணப்படுகிறது.