அனுராதபுரம் – பந்துலகம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கனரக உபகரணங்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்படி உயிரிழந்தவர் தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் – புத்தளம் வீதியின் இடதுபுறத்தில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த நிலையிலேயே இளைஞன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.