கெக்கிராவ – இபலோகம லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தில் வரிசையில் காத்திருந்த 40 வயதுடைய நபர் ஒருவர் நேற்று காலை (15) உயிரிழந்துள்ளார்.
இந் நபர் அவுக்கன பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் முச்சக்கர வண்டி சாரதி எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந் நபர் குறித்த வரிசையில் காத்திருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.