எரிபொருளுக்காக வரிசையில் காத்திருப்போரை இலக்கு வைத்து சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். தாம் எரிபொருளை பெற்றுத்தருவதாக கூறி வரிசையில் காத்திருப்பவர்களிடம் பணத்தை பெற்று சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்படுகின்றது.
எனவே, அவ்வாறான நபர்கள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்திய பொலிஸார், அவர்கள் குறித்த தகவல்கள் அறிந்திருப்பின் தமக்கு அறியப்படுத்துமாறும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை மகரகம பகுதியில் மகிழுந்தில் வரிசையில் காத்திருந்த நபரிடம் எரிபொருள் பெற்றுத்தருவதாக கூறி ஒருவர் பணம் பெற்றுள்ளார். எரிபொருளை எடுத்து வரும் வரையில் காத்திருக்குமாறு கூறி குறித்த சந்தேகநபர் 40 லீற்றர் எரிபொருளுக்கான பணத்தை பெற்றுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால், சந்தேகம் ஏற்பட்டதையடுத்து பொலிஸில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்