இலங்கைக்கு எடுத்து வர எதிர்பார்க்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்காக கட்டணங்களுடன் தரகு பணத்தையும் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது டுவிட்டர் தளத்தில் அவர் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
எண்ணெய் விலை வீழ்ச்சி
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. நேற்றும் இந்த வீழ்ச்சியை அவதானிக்க முடிந்தது.
இந்த சூழ்நிலையிலேயே இலங்கைக்கு எடுத்து வரப்படவுள்ள 40,000 மெட்ரிக் தொன் எரிபொருளுக்காக மேலதிகமாக 700 மில்லியன் ரூபாவை தரகுப் பணமாக வழங்க பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இணங்கியுள்ளது.
இது தொடர்பில் கேட்டறிவதற்காக நாடாளுமன்ற கோப் குழுவின் முன் முன்னிலையாமாறு, அதிகாரிகள் அழைக்கப்பட்டபோதும், அவர்கள் அதனை நிராகரித்துவிட்டதாக ஹர்ச டி சில்வா குற்றம் சுமத்தியுள்ளார்.