நெற்பயிர்கள் கதிர் விடத் தொடங்கியுள்ள நிலையில் வயல்களுக்குத் தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் ஆரம்பித்த சத்தியாகிரகப் போராட்டம் தொடர்ந்துள்ள நிலையில் அரசாங்க அதிகாரிகளுக்கு அதுத் தெபாடர்பில் எவ்வித கவலையும் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றின் மூலம் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் சுமார் 75,000 ஏக்கர் நெற் பயிர்ச்செய்கை மேற்கொண்டுள்ள போதிலும் நிலவும் நீர்ப்பாசனப் பிரச்சினையால் 65,000 ஏக்கரில் மாத்திரமே நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலை தொடரும் பட்சத்தில் நெற்பயிர்ச்செய்கையில் 16.81 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது உரத்தடைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தன்னிச்சையான முடிவுகளை அரசாங்கம் நினைவுகூற வேண்டுமெனவும் தற்போதைய நாட்டு நிலைமையில் எமக்கு சோறிடும் விவசாயிகளின் வாழ்வோடு விளையாடுவதனால் ஏற்படும் விளைவுகளை நாடு முழுதும் அனுபவிக்க நேரிடும் எனவும் நாட்டின் விவசாயத்தை முடக்குவதற்கு எடுக்கும் அரசாங்கத்தின் நுட்பமான மற்றும் தந்திரமான முயற்சி எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றார்.
விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினால் மாத்திரம் வளதான நாட்டினைக் கட்டியெழுப்பமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் மக்களுக்கு சாதகமான முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் பட்சத்தில் சுபீட்சமான எதிர்காலத்தைக் காணக் கூடியதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.