கொவிட் நிலமை காரணமாக வேறு எந்தவொரு நாடும் வீழ்ச்சியடையாத விதத்தில் இலங்கை வீழ்ச்சியடையும் நிலைக்கு உள்ளாகி உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையான மற்றும் பொறுப்பற்ற ஆட்சியின் காரணமாக நாடு இவ்வாறான மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அரச அமைச்சர்களிடம் நாட்டில் எழுந்துள்ள பிரச்சனைக்கு பதில் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.