இலங்கையில் சமீபக் காலமாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 2 மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.
சீரற்ற வானிலையால் ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 434 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், நில்வளா கங்கையை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளுக்கு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், தல்கஹகொட மற்றும் பானடுகம ஆகிய பகுதிகளை அண்மித்த பிரதேசங்களுக்கே இவ்வாறு வெள்ள அபாய முனனெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.