தற்போது நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் (மூளைசாலிகள்) நாட்டை விட்டு வெளியேறும் சமீபத்திய போக்கு குறித்து எதிர்வரும் அக்டோபர் 6ஆம் திகதி ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 3ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நாடாளுமன்ற அமர்வுகளை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி காரணமாக தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு தொடர்பான “ஒத்திவைப்பு வேளை விவாதம்” எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.