எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக் கூடியதாகயிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்புக்களை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதுவரை இரண்டு கட்டங்களின் கீழ், நாட்டின் அனைத்து முன்பள்ளி பாடசாலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மாணவர்களின் வருகையில் முறையான அதிகரிப்பை காண முடிந்துள்ளது. ஆசிரியர்களின் மற்றும் அதிபர்களின் வருகையும் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.