எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொடர்பில் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரின் பால்நிலை குறித்து அமைச்சர் ரோஹித்த கேள்வி எழுப்பியதுடன், சஜித் ஓர் பெண் போன்றவர் என அவர் விமர்சனம் செய்திருந்தார்.
சஜித் பேசும் போது அவரது உருவம் தெரியாவிட்டால் ஒரு பெண் பேசுவது போன்றே இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமைச்சர் ரோஹித்த எதிர்க்கட்சித் தலைவரை தனிப்பட்ட ரீதியில் இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்ப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான நபர்கள் அமைச்சரவையில் அங்கம் வகிப்பதனையிட்டு ஜனாதிபதியும், பிரதமரும் வெட்கப்பட வேண்டுமெனவும் சமூக ஊடகங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.