ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவின் முதலாவது இலக்காக நான் இருக்கலாம் என உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ஊடகங்களிற்கு வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், எதிரி என்னை முதலாவது இலக்காகவும் தனது குடும்பத்தை இரண்டாவது இலக்காகவும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தான் தலைநகரில் உள்ள அரசகட்டிடத்தில் தங்கியிருப்பதாகவும்,தனது குடும்பத்தினர் உக்ரைனில் தங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிரியின் சதிக்கும்பல்கள் தலைநகருக்குள் நுழைந்துள்ளதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.