இந்தோனேசியாவில் மீன்பிடிக்கச்சென்ற ஒரு சிறுவனை முதலை ஒன்று உயிருடன் விழுங்கியது.எட்டு வயது சிறுவனான Dimas Mulkan Saputra, தன் தந்தையுடன் நதி ஒன்றிற்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தான்.அப்போது, 26 அடி நீள ராட்சத முதலை ஒன்று Dimasஐக் கவ்விக்கொண்டது. Dimasஇன் தந்தை தன் மகனைக் காப்பாற்றுவதற்காக அந்த முதலையுடன் வெறுங்கையுடன் போராடியுள்ளார்.
ஆனால், அந்த முதலை சிறுவனை தண்ணீருக்கடியில் இழுத்துச் சென்றுவிட்டது. மறுநாள் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அந்த முதலையைப் பிடித்துவிட்டார்கள்.அதன் வயிற்றை அவர்கள் கீறியபோது, Dimasஇன் முழு உடலும் அதன் வயிற்றுக்குள் இருந்ததைக் கண்ட அந்த கிராம மக்கள் Dimas, Dimas என துயரக் குரல் எழுப்பினார்கள்.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த கிராமத்தவர்கள், அந்த முதலையின் உடலைக் கீறி, சிறுவனை வெளியே எடுக்கும் திகில் காட்சிகள் பதிவாகியுள்ளன.அந்த முதலை, அந்த சிறுவனை கடிக்காமல் முழுமையாக விழுங்கியிருந்தது. முழு உடலுடன் மீட்கப்பட்டும், உயிரில்லாமல் Dimas மீட்கப்பட்டதைக் கண்டு கண்ணீர் விட்டுக் கதறினார்கள் அக்கிராமத்தினர்.