ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
ஊர்காவற்துறை மக்கள் வங்கி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் 47 கிராம் கேரளக் கஞ்சாவுடன் நேற்றையதினம் (10) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், ஊர்காவற்துறை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து இக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்றையதினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தியவேளை அவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.