தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 625 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 63 வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 62,710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதது.
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் மற்றும் பிரவேசிக்கும் 13 இடங்களில் நேற்றைய தினம் 858 வாகனங்களும் மற்றும் 1,470 நபர்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.