பிரதமரின் பாதுகாப்பு பிரிவு பணிப்பாளராக கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொமேஷ் லியனகே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், பொதுச் சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, இந்த பணி நீக்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு அருகில் கடந்த சனிக்கிழமை (9) ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பிலேயே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.