கிளிநொச்சி மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளராக கடமையாற்றி வந்த ஊடகவியலாளர் எஸ்.என். நிபோஜன் நேற்று (30) மாலை கொழும்பு தெகிவளை பகுதியில் புகையிரத விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை பல்வேறு நெருக்கடி நிலைகளுக்கு மத்தியில் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர் நிபோஜன் ஒரு சிறந்த புகைப்பட கலைஞராகவும் திகழ்ந்தார்.
உயிரிழந்த ஊடகவியலாளர் நிபோஜன் அவர்களுடைய உடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.