உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெற வேண்டுமானால் அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட வேண்டும். அந்த நிலைமைக்கு நாம் இப்போது தள்ளப்பட்டுள்ளோம் எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (14.02.2023) தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.
இக் கூட்டத்தின் தொனிப்பொருளாக, இந்தச் செய்தியை தான் நான் புரிந்துகொண்டேன் என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவித்துள்ளதாவது,
அரசை மீறி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சக்தி இல்லை. தேர்தல் நடத்த அரசு விடாது. ஆகவே, தேர்தல் இடம்பெற வேண்டுமானால், அனைத்துக் கட்சியினரும் வீதியில் இறங்கிப் போராட்டம் செய்ய வேண்டும். வேறு மாற்று வழியில்லை” என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.