உலக சந்தையில் எரிபொருள் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது.
பிரண்ட் வகை மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 அமெரிக்க டொலரால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 111.37 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
அதேநேரம், அமெரிக்காவின் டப்ளியு. டீ. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108.24 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.